அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday 8 July 2016

DIRECT RECRUITMENT EXAM FROM GDS TO PA/SA FOR THE UNFILED VACANCIES OF DEPTL QUOTA FOR 2013 & 2014 NOTIFIED FOR TAMILNADU CIRCLE

GDS  ஊழியர்களுக்குத் அவசியம்   தெரிவிக்கவும் 

GDS ஊழியர்  நேரடியாக  எழுத்தர் தேர்வு எழுதி தேர்வு  பெற  ஓர் அரிய வாய்ப்பு. 

2013 மற்றும் 2014 ஆண்டுகளில்  தபால்காரரில் இருந்து  எழுத்தராக தேர்வு பெறாததால் ஏற்பட்ட  காலியிடங்கள் மொத்தம் 194 தமிழக அஞ்சல் வட்டத்தில் அறிவிப்பு. 

கல்வித் தகுதி = 10 +2 அல்லது 12TH   பாஸ் செய்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் சேவை  5 ஆண்டுகள் ( 1.1.2013 அல்லது 1.1.2014 ஆண்டு காலியிடங்களில் ,  அந்தந்த  ஆண்டுகளில்  தகுதி ).

வயது  வரம்பு  UR  - 30  OBC - 33  SC /ST  - 35 க்குள் இருக்க வேண்டும்  ( 1.1.2013 அல்லது 1.1.2014 ஆண்டு காலியிடங்களில்  அந்தந்த  ஆண்டுகளில்  தகுதி ). 

தேர்வு = பேப்பர்  I - APTITUDE  TEST - மொத்த மதிப்பெண்  100 - தேர்வு  நான்கு பகுதிகளாக  ( 4 X 25 MARKS ) மொத்தம்  2.00 மணிநேரம்  நடைபெறும்.


Part -A     -   G.K - (25 QUESTIONS)
Part -B     -   MATHS (25 QUESTIONS)
Part -C     -   ENGLISH- (25 QUESTIONS) 
Part -D     -   REASONING & ANALYTICAL ABILITY- (25 QUESTIONS)


விண்ணப்பம் அனுப்பப்  கடைசி நாள்   -  12.7.2016
தேர்வு தேதி                                            -  31.7.2016

அந்தந்த கோட்டங்களின்  காலியிடங்கள்  X 5 வரை  MERIT அடிப்படையில் தேர்வு முடிவு  வெளியிடப்படும் . தேர்வு  பெற்றவர்கள் மட்டுமே பேப்பர் II க்கான (COMPUTER SKILL TEST )  தேர்வுக்கு அழைக்கப்படுவர்.


காலியிடங்கள்  இல்லாத  கோட்டங்களில்  விண்ணப்பங்கள்  பெறப்பட மாட்டாது. இதனை  உங்கள் கோட்டத்தில் உள்ள  அனைத்து இளைய  GDS தோழர்களுக்கும்  தெரிவிக்கவும்.


No comments:

Post a Comment