அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday 1 July 2016

7 வது ஊதிய குழுவின் பரிந்துரையும், ஏமாற்றமும்

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்,
நாகைகோட்டம், நாகப்பட்டினம் – 611 001
சுற்ற்றிக்கை எண்:- 15                                        நாள்:- 30.06.2016
7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி  கடைநிலை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக இருக்கும்.  புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

பரிந்துரையும் திருத்தமும்..

மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில்  14.27 சதவீதம் ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.23,500 ஆக  நிர்ணயிக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. திருத்தப்பட்ட இந்தப் பரிந்துரைக்கே மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்து மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி:

இந்நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரை ஏற்புடையதாக இல்லை எனக் கூறி மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விலைவாசிக்கேற்றவாறு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அஞ்சல் துறையில் கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை மாத ஊதியம் 7000 மற்றும் அகவிலைப்படி (125%) 8750 ஆகியவற்றை ஒன்றினைத்து மாத அடிப்படை ஊதியம் ரூ.18000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத அடிப்படை ஊதியம் 7000/-த்திலிருந்து 18000/-ஆக உயர்த்தப்பட்டால் ரூ.11000/- உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால் உண்மையான மாத ஊதிய உயர்வு ரூ.2250/- மட்டுமே. நமது சங்கங்களின் நியாமான குறைந்தபட்ச அடிப்படை மாத ஊதியம் ரூ.26000/- நிர்ணயிக்கவேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. நமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் இப்பொழுது தெரிவிக்காவிட்டால் அடுத்த 10 வருடங்களுக்கு நம் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் போய்விடும். இலாக்கா ஊழியர்களுக்கே இந்த அவல நிலை என்றால், புறநிலை ஊழியர்களின் ஊதியமாற்றம் நிச்சயம் நியாயமானதாக இருக்காது. ஆகவே, வருகிற 11.07.2016 அன்று நடைபெறுகின்ற காலவரையற்ற வேலை நிறுத்ததில் நாம் அனைவரும் முழுமையாக பங்குபெற்று நமது கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.                        
போராட்ட வாழ்த்துக்களுடன் !
தலைவர்                                      செயலர்                               நிதிச்செயலர்
கே.மனோகரன்-P3                     எஸ்.மீனாட்சிசுந்தரம்-P3                எஸ்.மாரிமுத்து-P3
எம்.சரவணவேலன்-P4                      பி.தசரதன்-P4                        டி.ராஜேந்திரன்-P4
எம்.வீரமணி-NFPEGDS                டி.சட்டநாதன்-NFPEGDS              வி.பக்கிரிசாமி-NFPEGDS


No comments:

Post a Comment