அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday, 29 July 2016
தொழிற்சங்க தலைவர்களின் சிந்தனைக்கு!!

      7 வது ஊதிய குழுவின் பாதகமான பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற் தகராறு சட்டத்தின்படி முறையாக வேலை நிறுத்த அறிவிப்பினை தொழிலாளர் ஆணையத்திடம் கொடுத்த தொழிற்சங்கங்களை, வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன் ஏன் தொழிலாளர் ஆணையம் சமரச தீர்வு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள் ஏன் மத்திய அமைச்சர்களின் இல்லத்திற்கு சென்று பேச வேண்டும்.

தொழிலாளர் ஆணையம் தானே இருதரப்பையும் அழைத்து பேசி உரிய முடிவு எடுக்க வேண்டும். தொழிலாளர் ஆணையரால் நியமிக்கப்பட்ட தொழிலாளர் சமரச தீர்வு அதிகாரியின் (Labour Conciliation Officer) முன் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பின் இருதரப்பு வாதங்களையும் முறையாக எழுத்து பூர்வமாக பதிவு செய்திருக்க முடியும்.

குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்துதல் மற்றும் ஊதியநிர்ணய காரணியில் மாற்றம் போன்ற கோரிக்கைக்கு உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்ற அரசு தரப்பு உறுதிமொழியை எழுத்து பூர்வமாக பெற்றிருக்க முடியும். அமைக்கப்பட உள்ள உயர்மட்ட குழுவில் ஊழியர் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டா என்பது தெரியவில்லை.


இதற்கு முன் அமைக்கப்பட்ட கேபினட் செயலர் திரு.சின்ஹா கமிட்டியின் பரிந்துரைகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்பட வில்லை. பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையென்றால் தொழிலாளர் உரிமைகளை காக்க சட்டபூர்வ நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள தலைவர்கள் முன் வருவார்களா?

No comments:

Post a Comment