அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday, 23 June 2017

AADHAR TRAINING

ஆதார் பதிவு மற்றும் மேலூட்டம் செய்வதற்கான பணிகள் அஞ்சல்துறை மூலம் செய்திட மத்திய அரசு பணித்துள்ளது. அதற்கான பயிற்சி அளித்து தேர்வும் நடத்தி சான்றளிக்க ஆதார் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நமது கோட்டத்தில் தற்போது அங்கிகரிக்கப்பட்ட 60 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அனத்து அலுவலகங்களும் வேலை பளு அதிகமாக உள்ளது, அனைவரும் அறிந்ததே. காலியிடங்களை நிரப்புவதற்கு நிர்வாகம் எந்த ஒரு முன் முயற்சியும் எடுக்காமல் புதிய, புதிய வேலை இனங்களை அறிமுகப்படுத்தி ஊழியர் வேலை பளுவினை அதிகரித்துள்ளது.

ஆதார் பதிவிற்கான ஆன்-லைன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மேற்கண்ட வேலையினை செய்ய பணிக்க படுவார்கள். தேர்ச்சி பெறாதவர்கள் தகுதி இல்லை என்று மேற்கண்ட பணியினை மேற்கொள்ள அனுமதி இல்லை.

வாழ்த்துக்களுடன்!!!!!

AIPEU GROUP-C,NAGAPATTINAM

No comments:

Post a Comment