அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Thursday, 30 March 2017

AIPEU                        NFPE                             AIPEU
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,
குரூப்-சி, போஸ்ட்மேன் / MTS & GDS-NFPE
திருவாரூர் கிளை, திருவாரூர் – 610 001.
சுற்றறிக்கை எண்:- 001                                                                 நாள்:- 28.03.2017
***********************************************************************************************************
அன்பு தோழர்களே! தோழியர்களே!!
பணி ஓய்வு பாராட்டு விழா
 விழா நாயகர்:-

திரு.K.ராமலிங்கம்,
முன்னாள் கிளை செயலர்- அஞ்சல் மூன்று, திருவாரூர்-610001
 நாள் :-
02-04-2017 ஞாயிற்றுக்கிழமை
 நேரம்:-
மாலை 05.00 மணி முதல்
 இடம்:-

VKM மண்டபம் (மேல் மாடி),
பேருந்து நிலையம்அருகில், திருவாரூர்.
 நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தோழர் K.ராமலிங்கம் முன்னாள் கிளை செயலர்-P3, திருவாரூர் அவர்கள் இலாக்காவில் 1981-ல் RTP ஆக பணியமர்த்தப்பட்டு பின் 1989-ல்  திருவாரூர் தலைமை அஞ்சலகத்தில் எழுத்தராக பணி நிரந்தரம் பெற்று கடந்த  30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வருகின்ற 31.03.2017 அன்று பணி ஓய்வு பெற உள்ளார்.
தோழர் K.ராமலிங்கம் அவர்கள் RTP ஆக பணிபுரிந்த காலங்களிலேயே தொழிற்சங்க பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். 1992-ல் திருவாரூர் அஞ்சல் மூன்று கிளை சங்கத்தின் செயலராக தேர்வு பெற்ற அவர் கடந்த 25 வருடங்கள் தொடர்ந்து கிளை செயலராக தொழிலாளர் நலனுக்காக போராடிய போராளி ஆவார்.
 கொள்கை பிடிப்பும், போர்க்குணமும் எந்த ஒரு பிரச்சினையையும் ஆராய்ந்து ஊழியர் நலனை முன்னிறுத்தி செயல்படும் தனித்தன்மை கொண்ட தோழர் K.ராமலிங்கம் அவர்களை கெளரவிக்கும் முகத்தான் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் VKM திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள பணிஓய்வு பாராட்டு விழாவில் முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய, மாநில, கோட்ட சங்க நிர்வாகிகள், பிற தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் முன்னோடிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். அனைத்து தோழர்கள் மற்றும் தோழியர்களும் பெருந்திரளாக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
தோழமை வாழ்த்துக்களுடன் !!
தலைவர்                         செயலர்                நிதிச்செயலர்
P3-  R. பாஸ்கரன்                      J. ரேணுகா                   K. வனஜா
P4-  R. கலியபெருமாள்                S. பக்கிரிசாமி                N. வசந்தா
GDS- N. பாலசுப்ரமணியன்           V.K.P. பிரபாகரன்               N. சண்முகவடிவேலு

மற்றும் R. தன்ராஜ், மாநில செயலர், NFPE-GDS.

No comments:

Post a Comment