அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Wednesday, 16 November 2016

மாநில செயலரின் கவனத்திற்கு,


கடந்த 09.11.2016 முதல் துணை மற்றும் தலைமை அஞ்சலகங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் தினம் இரவு 11 மணி வரை அலுவலகத்திலிருந்து வேலையினை முடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற உத்திரவு ஊழியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. இதே போல் இன்று 13.11.2016 ஞாயிறு மற்றும் 14.11.2016 விடுமுறை நாளில் அனைத்து துணை மற்றும் தலைமை அஞ்சலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைத்து அனைத்து ஊழியர்களும் பணபரிவர்த்தனை பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
       09.11.2016 முதல் வேலை நாட்களில் அதிக நேரம் பணியர்த்தமைக்காக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தலா ரூ.1000/- மிகுதி நேர வேலைபடியாக வங்கிகளில் கொடுத்துள்ளதுபோல் வழங்க ஆவண செய்ய வேண்டும். அதேபோல் விடுமுறை நாட்களில் பணிபுரிந்ததற்காக அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் ஒரு நாள் ஊதியத்தின் இரட்டிப்பு மடங்கிணை விடுமுறை நாள் பணிப்படியாக வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
       மேலும், விடுமுறை நாட்களில் அஞ்சல் ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்தும் அந்த உத்தரவினை கைவிட வலியுறுத்தியும் வருகின்ற 21.11.2016 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அறிவிப்பு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
                                                    
                                                            S.மீனாட்சிசுந்தரம்,                                                           கோட்ட செயலர்-P3

No comments:

Post a Comment