அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Sunday, 13 November 2016

பழைய ரூபாய் நோட்டுக்களான ரூ.500/- மற்றும் ரூ.1000/- மாற்றுவதற்கு பொதுமக்களின் சேவைக்காக நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகத்தின் சிறப்பான சேவை!!!!!


கட்டு கடங்காத மக்கள் கூட்டத்தை மிக திறமையாக சமாளித்து அவர்களுக்கு சேவையாற்றிட தனது கோட்ட அலுவலக ஊழியர்களை அனுப்பியதோடு மட்டுமில்லாமல், தன்னையே இப்பணியில் அர்ப்பணித்துக் கொண்டு, தண்டனை  கொடுப்பதும். இயற்றும் தண்டனையின் அளவினை உயர்த்துவதுமே தங்கள் பணி என்று பல மேலதிகாரிகள் இருக்க ஊழியர்களை ஒருங்கிணைத்து அவர்களுடன் களத்தில் இணைந்து பணியாற்றிய நமது கோட்ட அதிகாரி ஒரு மாறுபட்ட அதிகாரியாக திகழ்கின்றார். அவருக்கு நம் வாழ்த்துக்கள்.இச்சிறப்பான பொதுமக்கள் சேவையில் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்ட கோட்ட அலுவலக ஊழியர்களையும், தலைமை தபால் அலுவலக ஊழியர்களையும் கோட்டச் சங்கம் மனதார பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.


No comments:

Post a Comment