அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Monday 17 October 2016

தொழிற்சங்க ஆசானும், நமது அஞ்சல் மூன்று,நான்கு மற்றும் GDS சங்கங்களின் கெளரவ ஆலோசகருமான அண்ணன் திரு.S.ராஜ்மோகன் அவர்கள் முதன்மை அஞ்சல் துறை தலைவர்,சென்னை அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த மடல்.

பெறுநர்:-
முதன்மை அஞ்சல்துறைதலைவர்,
தமிழ்நாடு வட்டம்,
சென்னை-600 002.

ஜயா,
       2016 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மத்திய மண்டலத்தில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்தின் பட்டாசு கூப்பன்களை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இதன் மூலம் மத்திய மண்டலத்திலுள்ள அனைத்து அஞ்சலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் குறிப்பிட்ட வியாபார நிறுவனத்தின் விளம்பர மற்றும் விற்பனை தூதுவராக செயல்பட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
       அஞ்சல்துறை என்பது ஒரு சாதாரண வியாபார நிறுவனம் அல்ல, மாறாக மத்திய அரசின் பல்வேறுதுறைகளில் ஒன்றாகும். ஆதலால், அஞ்சல்துறையின் மூலம் விளம்பரபடுத்தப்படும் பொருட்களின் உயர்ந்த தரத்திற்கு மத்திய அரசின் உத்திரவாதம் உள்ளது என்ற எண்ணம் பொதுமக்களிடம் மேலோங்கியுள்ளது, மறுக்க முடியாத உண்மை. ஆகவே, அஞ்சல் துறை போன்ற பாரம்பரிய மிக்க அரசுத்துறையின் நன்மதிப்பை தனியார் வியாபார நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.
       இந்த சூழலில் ஒரு சமுக ஆர்வலர் என்ற நிலையில் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விளக்கம் பெறவேண்டியது காலத்தின் கட்டாயம் என கருதுகிறேன்.
       குறிப்பிட்ட நிறுவனத்தின் பட்டாசு விற்பனை கூப்பன்களை அஞ்சலகங்கள் மூலம் விற்பனை செய்ய யார் முடிவு செய்தது? அல்லது இதற்கென உயர்நிலைகுழு ஏதேனும் அமைக்கப்பட்டு அந்த குழு முடிவு செய்ததா? அப்படியென்றால் அந்த குழுவை நியமித்தது யார்? அதன் உறுப்பினர்கள் யார்? எந்த அளவீடுகள் மற்றும் அளவுகோலின் அடிப்படையில் மேற்கண்ட நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட்து. குறிப்பிட்ட நிறுவனத்தை தேர்வு செய்ததில் தனியொரு அதிகாரியோ அல்லது குழுவோ ஆதாயம் பெறுவதை தடுக்க ஏதேனும் வழிமுறைகள் வரையறுக்கப்பட்டு பின்பற்றப்பட்டுள்ளதா? இந்த வினாக்களுக்கு விடை தெரியாத வரை மேற்கண்ட வியாபார யுக்தியில் தனி நபரோ அல்லது குழுக்களோ ஆதாயம் அடைய அல்லது ஏற்கனவே பெற்றிருக்க வாய்ப்புண்டு என்ற ஜயப்பாடு எழுவது யாதார்த்தமானது.
       அய்யன் பட்டாசு நிறுவனத்தின் பூச்சட்டி சிறியது ஒரு பாக்ஸின் விலை அஞ்சல்துறை விற்பனை மையத்தில் ரூ.70/- என நிர்ணயிக்கபட்டுள்ளது. 15% தள்ளுபடி போக ரூ.60/- ஆகிறது. ஆனால், பிற கடைகளில் இதே அய்யன் பட்டாசு நிறுவனத்தின் பூச்சட்டி சிறியது ஒரு பாக்ஸ் ரூ.57/- க்கு விற்கப்படுகின்றது. அஞ்சல்துறை விற்பனை மையத்தில் வாங்குவதால் நுகர்வோருக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிகின்றது.
       ஆகவே, அஞ்சல்துறையின் நன்மதிப்பை கருத்தில் கொண்டு மேற்கண்ட வியாபார ஒப்பந்தத்தில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதை உறுதிபடுத்த மத்திய புலனாய்வு ஆணையர் அலுவலகம் மூலம் தகுந்த விசாரணைக்கு உட்படுத்துவது சாலச் சிறந்தது என்று நம்புகிறேன்.
       சமுக நலன்கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரங்களை தெரிவிக்கும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                           நன்றி !                                                                                                                  (S.ராஜ்மோகன்) 
                                              Retd Postmaster & Honorary Advisor,
                                                 AIPEU GR-C,PM/MTS & GDS

                                                    Nagapattinam-611001

No comments:

Post a Comment